சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் சீமராஜா சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளிவந்தது. அதில் சிவா மன்னராக நடித்திருக்கும் ஒரு காட்சியும் வெளிவந்தது.

படத்தின் ட்ரெய்லரும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் என்பதால் அதிக அளவில் ரீச் ஆகி நெட்டிசன்களை பார்க்க வைத்தது.

இந்த நிலையில் அருண் விஜயின் டுவிட்டர் பதிவில் இந்த ட்வீட் பதிவிடப்பட்டது. “யாரெல்லாம் மாஸ் பண்றதுனு ஒரு வெவஸ்த இல்லாம போச்சி, தமிழ் ரசிகர்களுக்கு தெரியும். உண்மையான திறமைகளை ஆதரியுங்கள்.” என்பதே அது.

பலரும் ஏன் சிவாவை மட்டம் தட்டுறிங்க என கேட்ட சில நிமிடங்களில் அந்த ட்வீட் அழிக்கப்பட்டு யாரோ என் அக்கவுண்ட்டை இரவு ஹேக் செய்து விட்டார்கள் சரி செய்து விட்டேன் என அருண் விஜய் பதிவிட்டுள்ளார்.

Loading...