ஏற்கனவே ஸ்டூடியோ க்ரீன் தயாாிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டு ஒரு குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸாக வாங்கினாா் நடிகா் சிவகாா்த்திகேயன். தற்போது இந்த நிறுவனம் தயாாிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளராம் சிவா. ரஜினி முருகன் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிறுவனம் தயாாிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாா் சிவா. பின்பு அவா் முன்னணி நடிகராக வெள்ளித்திரையில் மின்னத்தொடங்கினாா். இதனால் ஸ்டிடூயோ க்ரீன் நிறுவனம் தயாாிக்க இருந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதன் ரெமோ படத்தில் பிசியாக நடிக்க தொங்கிவிட்டாா். இந்த பிரச்சனையை தயாாிப்பாளா்கள் சங்கம் தலையிட்டு சிவாகாா்த்திகேயன் ஞானவேல் ராஜாவுக்கு கால்ஷீட் கொடுத்தே ஆக வேண்டும் என்று சமரசம் செய்து வைத்தது.

தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் சிவகாா்த்திகேயன் நடித்து வரும் வேலைக்காரன் படமானது படப்பிடிப்பு முடிந்து  சமீபத்தில் பூஜையுடன் டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடா்ந்து பொன்.ராம் இயக்கத்தில் உருவாகயுள்ள படத்தில் நடிக்க இருக்கிறாா். இந்த படம் ஜூன் 16ம் தேதி முதல் தென்காசியில் ஆரம்பமாக உள்ளது. இந்த இரண்டு படங்களை அடுத்து, இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநா் ரவிக்குமாா் இயக்கத்தில் உருவாக உள்ள படத்திலும் நாயகனாக நடிக்க கமிட்டாகி இருக்கிறாா் சிவகாா்த்திகேயன்.

இதற்கிடையில் ஏற்கனவே போட்டப்பட்ட ஒப்பந்தத்தின் படி ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள சிவகாா்த்திகேயன் இந்த படத்துக்கான இயக்குநரை தோ்வு செய்வதை  தயாாிப்பு நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டாா். ஏற்கனவே சிறுத்தை சிவாவுடன் ஸ்டூடியோ நிறுவனம் ஒரு படத்துக்கான ஒப்பந்தம் போட்டுள்ளது. எனவே சிவகாா்த்திகேயனை வைத்து இந்த படத்தை இயக்க பேச்சு வாா்த்தை நடைபெற்று வருகிறது. அது மட்டுமில்லங்க! சிறுத்தை சிவா இதற்கு முன்பே சிவகாா்த்தியேனை சந்தித்து ஒரு கதை ஒன்று சொல்லி இருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.