மறைந்த நெல் ஜெயராமனின் இறுதி செலவை தானே ஏற்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிடமேடு கிராமத்டஹி சேர்ந்தவர் ஜெயராமன். பாரம்பரிய நெல்வகைகளை காப்பாற்றும் நோக்கில் இவர் 174 அரிய நெல் விதைகளை சேகரித்து வைத்துள்ளார். ஆண்டுதோறும் நெல் திருவிழாவை நடத்தி தேசிய, மாநில விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

கடந்த 2 வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்ட வந்த நெல் ஜெயராமன் சில நாட்களுக்கு முன்பு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு நடிகர்கள் சத்தியராஜ், சிவகார்த்திகேயன், கார்த்திக் உட்பட அரசியல்வாதிகள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினர் பண உதவி செய்தனர்.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை மரணமடைந்தர். இவருக்கு சித்ரா என்கிற மனைவியும், 11 வயதில் ஒரு மகனும் உள்ளார். இவரின் உடல் சென்னை தேனம்பேட்டை ரத்னா நகர் 2வது தெருவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை வைக்கப்படுகிறது. 11 மணிக்கு மேல் அவரின் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட்டு, நாளை மாலை அவருக்கு இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.

அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட மொத்த செலவையும் நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், நெல் ஜெயராமனின் இறுதி செலவையும் தானே ஏற்பதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.