சிவகார்த்திகேயனை முந்தினார் மகேஷ்பாபு

சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் ‘வேலைக்காரன்’ படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. மேலும் இந்த படத்தின் வியாபாரமும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘ஸ்பைடர்’ படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 27 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் படத்தைவிட மகேஷ்பாபு படம் 2 நாள் முந்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

‘ஸ்பைடர்’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிந்துவிட்டதாகவும் இன்னும் மீதமிருக்கும் ஒரே ஒரு பாடல் காட்சியில் படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.