Sivakarthikeyan @ Nayanthara Birthday 2016 Celebration Stills
Sivakarthikeyan @ Nayanthara Birthday 2016 Celebration Stills

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய ‘வேலைக்காரன்’ சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் இந்த வெற்றி ஜோடி மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகியாக சாய்பல்லவி நடிப்பார் என கூறப்பட்டது.

இதையும் படிங்க பாஸ்-  அனுஷ்கா, நயன்தாரா காணாமல் போனால்தான் தேடுவீர்களா? - டென்ஷன் ஆன உயர் நீதிமன்றம்

ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தில் நயன்தாரா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்த பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகவும் தெரிகிறது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் இன்னொரு படமான இயக்குனர் ரவிகுமார் இயக்கும் படத்தில் ரகுல் ப்ரித்திசிங் நாயகியாக நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க பாஸ்-  சிவகார்த்திகேயனுக்கு வாய்த்த அதிர்ஷ்டம் இதுவரை யாருக்கும் அமைந்ததில்லை!