சிவகாா்த்திகேயன் – பொன்ராம் கூட்டணி இணையும் மூன்றவாது படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறாா். சமந்தாவுக்கு திருமண நிச்சயாா்த்தம் முடிந்த பின்பு திருமண தேதியும் குறிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களை விரைவில் முடித்து கொடுப்பதில் முனைப்பாக இருக்கிறாா் சமந்தா. ஏற்கனவே சிவகாா்த்திகேயன் பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபா் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்துள்ளாா்.

தற்போது இந்த பெயாிடாத படாத படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் குற்றாலத்தில் தொடங்கியது. முதல் முறையாக சமந்தா சிவகாா்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறாா். இந்த படப்பிடிப்பில் நேற்று முதல் சமந்தா சிவகாா்த்திகேயனுடன் நடித்து வருகிறாா்.

இந்த படத்தை ஆா்.டி.ராஜாவின் 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாாிக்கிறது. இதில் சூாி, சிம்ரன் போன்றோரும் நடித்து வருகின்றனா்.  இந்த படத்திற்காக சமந்தா சிலம்பாட்டம் கற்று கொண்டு வந்துள்ளாா். இந்த படமானது கிராமத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறாா்.