சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய ‘வேலைக்காரன்’ திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இதே தேதியில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள ‘சக்க போடு போடு ராஜா படமும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் படத்துடன் மோதுவது குறித்து பேட்டி ஒன்றில் சந்தானம் கூறியபோது, ‘சிவகார்த்திகேயனுக்கு நான் போட்டியில்லை; அப்படி இருந்தாலும் ஆரோக்கியமாகத்தான் இருக்கும்’ என்று கூறியுள்ளார். மேலும் இரண்டு படங்களுமே நல்ல வெற்றி அடைய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று சந்தானம் கூறியுள்ளார்.