கோலிவுட் திரையுலகில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துவிட்ட நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியுந்தருவாயில் உள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  சீமராஜா டிரெய்லர்- மன்னர் வேடத்தில் சிவகார்த்திகேயன்

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகாவும், இந்த படத்திற்கு ஆஸ்கார் பரிசு பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன

இந்த நிலையில் நேற்று இயக்குனர் ரவிகுமார் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் ஏ.ஆர்.ரஹ்மானை நேரில் சந்தித்தனர். ரவிகுமாரின் இந்த படமும் முந்தைய படம் போலவே ஸ்பேஸ் சம்பந்தப்பட்டது என்பதால் இந்த படத்தின் இசை எப்படி அமைய வேண்டும் என்று மூவரும் சீரியஸாக ஆலோசனை செய்ததாகவும், அதில் ரஹ்மான் கூறிய சில ஐடியாக்கள் இருவரையும் கவர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  தொடர்ந்து சறுக்கும் சிவகார்த்திகேயன் - ரசிகர்களை கவராத ‘மிஸ்டர் லோக்கல்’