Sivakarthikeyan : தனது படத்தின் தலைப்பை வேறு நடிகரின் படத்துக்கும் வைக்கப்பட்டிருப்பதால் சிவகார்த்திகேயன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்க சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு ‘ஹீரோ’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் முறையாக அனுமதியும் பெறப்பட்டு, இதே தலைப்பில் பூஜையும் நடந்து முடிந்துவிட்டது. விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

இந்நிலையில், ஹீரோ என்கிற தலைப்புக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அர்ஜூன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்திற்கும் ‘ஹீரோ’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குனர் 4 வருடங்களுக்கு முன்பே இந்த தலைப்பை பதிவு செய்து வைத்திருந்ததாக கூறியுள்ளார். எனவே, இந்த விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்றுள்ளது.

அதேநேரம், அந்த தலைப்பை அந்த இயக்குனர் சரியாக புதுப்பிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே, ஹீரோ என்கிற தலைப்பு சிவகார்த்திகேயனுக்கே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.