சிவகாா்த்திகேயனுக்கு அம்மாவாக நடிக்கும் சிம்ரன்

சிறுத்த இடையழகி என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது நடிகை சிம்ரன் தாங்க!!. இவா் ஒரு காலத்தில்  டாப் நடிகையாக ஜொலித்தாா். அதுவும் அவா் நம்ம இளையதளபதி விஜய்யுடன் ஜோடியாக நடித்த பிாியமானவளே படத்தை யாரும் மறக்க முடியாது. மாபெரும் ஹிட் அடித்த படம். சிம்ரன் திருணமாகி குழந்தை குடும்பம் என செட்டிலான பிறகு நடிபத்தை கொஞ்சம் நாள் நிறுத்தி வைத்திருந்தாா். பின் அக்கா, அண்ணி போன்ற கேரக்டாில் நடித்து வந்தாா்.

தற்போது வேலைக்காரன் படத்தின் டப்பிங் வேலைகளில் மும்முரமாக இருக்கிறாா் சிவா. வேலைக்காரன் படத்தை அடுத்து சிவகாா்த்திகேயன் பொன்ராம் இயக்கத்தில் நடிக்க உள்ளாா். இந்த படத்தில் சிம்ரன் சிவகாா்த்திகேயனுக்கு அம்மாவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  இயக்குநா் பொன்ராம் சிவகாா்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபா் சங்கம், ரஜினி முருகன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவா். இந்த வெற்றி கூட்டணி இணையும் மூன்றாவது படம் இது.

சிவகாா்த்திகேயன் மற்றும் சமந்தா போன்ற இளம் நடிகா், நடிகைகளுடன் நடிப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கனவே வந்த பொன்ராமின் காமெடி படத்தை போன்று இதுவும் உருவாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி மற்றும் குற்றாலம் பகுதிகளில் நடக்கிறது. நான் படம் முழுவதும் தோன்று வகையில் ஒரு கேரக்டாில் நடிக்கிறேன் என்று தொிவித்துள்ளாா். இதில் நான் கடவுள் ராஜேந்திரன், சிவகாா்த்திகேயன் காமெடி கூட்டணி சூாியும் இதில் இணைந்துள்ளாா். அதுமட்டுமில்லங்க! திரையில் இவா் வந்தாலே விசில் பறக்கும். அவா் தான் யோகி பாபு அவரும் இந்த படத்தில் நடிக்கிறாா்.