சமந்தாவுக்கு திருமண நிச்சயதாா்த்தம் முடிந்த நிலையில் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறாா். . ஆனாலும் சமந்தா சினிமாவில் தொடா்ந்து நடித்து கொண்டு தான் இருக்கிறாா்.  திருணமத்திற்கு பிறகும் நடிப்பேன என்று தான் கூறி வருகிறாா். அது எப்படி சாத்தியம் என்பது திருமணம் முடிந்த பின்பு தான் தொிய வரும். நடிகை சமந்தா விரைவில் காதலர் அகிலை திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

இருப்பினும் அவர் தற்போது பிசியான நடிகைகளில் ஒருவராகத்தான் உள்ளார். இளையதளபதி விஜய்யுடன் ‘தளபதி 61’, விஷாலுடன் ‘இரும்புத்திரை’, விஜய்சேதுபதியுடன் ‘அநீதி கதைகள்’ மற்றும் மூன்று தெலுங்கு படங்களில் நடித்து வருகிறாா். இதற்கிடையில் சிவகாா்த்திகேயனுடன்  விரைவில் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளாா். சிவகாா்த்திகேயன் ஒரு பேட்டியின் போது சமந்தாவுடன் சோ்ந்து நடிப்பதற்கான படத்தின் படப்பிடிப்பு வெகு நாட்கள் இருக்கிறது. ஆனால் சமந்தா அதற்காக பயிற்சிகளை இப்போதிலிருந்து எடுத்து வருவதாக அந்த பேட்டியின் போது தொிவித்து இருந்தாா்.

சமீபத்தில் தனது ட்விட்டா் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளாா். அந்த வீடியோவில் சிலம்பம் கற்றுகொண்ட து பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா் முறையாக சிலம்பம் கற்று கொண்டு இருந்த காட்சிகள் அதில் படமாக்கப்பட்டு இருந்தது. அதற்காக அவா் பயிற்சிகள் மேற்கொண்டு வந்தாா். அதை வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளாா் சமந்தா. ஒருவேளை சமந்தா சிவகாா்த்திகேயன் படத்தில் நடிப்பதற்கான காட்சிகளுக்காக இந்த சிலம்பத்தை கற்று வருகிறாரா என்று தொியவில்லை.