சின்னத் திரையிலிருந்து வெள்ளித் திரையில் மின்னிக் கொண்டிருக்கும் வகார்த்திகேயன் வளா்ந்து வரும் இளம் நடிகர் வரிசையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். தனுஷ் படத்தில் ஆரம்பித்த இவரது பெரிய திரைப்பயணம் தற்போது தயாரிப்பாளராக உயர்ந்து நிற்கும் வகையில் அமைந்துள்ளது. தொடர்ந்து அவரது படங்கள் வெற்றி வாகை சூடி வருகிறது.

ஹன்சிகா, கீர்த்திசுரேஷ், ஸ்ரீதிவ்யா, சமந்தா என முன்னணி நடிகைகள் முதல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தார உட்பட அனைத்து நடிகைகளுடன் ஜோடியாக நடித்து வருகிறார். சீம ராஜா படத்தை முடித்த கையோடு அடுத்த படத்திற்கான பூஜையையும் போட்டு விட்டார். தற்போது சிவகார்த்திகேயன் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

இன்று நேற்று நாளை படத்தினை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ரவிக்குமார் இயக்கும் விஞ்ஞானம் தொடர்பான கதையில் சிவா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்ற நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமாகி உள்ளது.

பொன்ராம் இயக்கத்தில் சிவா மற்றும் சமந்தா இருவரும் நடித்துள்ள படம் சீமராஜா. இந்த படத்தை முடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் எஸ்.கே.13 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியிருக்கிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கும் இந்த படத்தை 24 ஏ.எம். ஸடூடியோஸ் தயாரிக்கிறது. மேலும் இதில் கருணாகரன், யோகி பாபு, இஷாகோபிகர், பானுப்ரியா, தொலைக்காட்சி பிரபலம் கோதண்டம் உள்பட பலரும் நடிக்கின்றனர்.

ரவிக்குமார் இயக்கத்தில் இன்று நேற்று நாளை படமானது வெளிவந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து ரவிக்குமார் இயக்கும் அடுத்த படம் இது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் விஞ்ஞானம் சம்பந்தமான இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ளது.