வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் ‘சீமராஜா’ ஆகும். இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருவதால் டுவிட்டர் டிரெண்டில் பலமணிநேரங்களாக இடம்பிடித்துள்ளது.

மேலும் ‘சீமராஜா’ திரைப்படம் வரும் விநாயகர் சதூர்த்தி தினத்தில் வெளியாகும் என்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பொன்ராம் இயக்கத்தில், டி.இமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.