சிவகார்த்திகேயன் தற்போது வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். எம்.ராஜா இயக்கத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து பொன்ராம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்றே கிராமத்து பின்னனியில் இப்படம் தயாராக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

இதையும் படிங்க பாஸ்-  மன்னன் படத்தின் காப்பியா மிஸ்டர் லோக்கல் ? – மௌனம் கலைக்காத படக்குழு !

நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்ய உள்ள சமந்தா,முன்னதாக சிவகார்த்திகேயன் படத்தை முடித்துக் கொடுத்துவிடுவார் என்று கூறப்படுகிறது. திட்டமிட்டபடி இவர்களது திருமணம் நடைபெற்றால் இந்த படமே சமந்தாவுக்கு கடைசி படமாக இருக்க வாய்ப்புள்ளது.