சிவகார்த்திகேயன் -பொன்ராம் படத்தின் முக்கிய அப்டேட்

02:30 மணி

Loading...

சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் உருவான ‘வேலைக்காரன்’ திரைப்படம் வரும் ஆயுதபூஜை திருநாளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் அவர் தற்போது பொன்ராம் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக சமந்தா ஜோடியாக நடிக்கும் இந்த படத்தில் நெபோலியன், சிம்ரன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் கம்போஸ் பணிகளை இசையமைப்பாளர் டி.இமான் இன்று முதல் தொடங்கியுள்ளார். இந்த தகவலை டி.இமான் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். ஏற்கனவே இதே கூட்டணியில் உருவான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘ரஜினிமுருகன்’ ஆகிய படங்களுக்கும் டி.இமான் தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 11 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393