ராஜேஷ் படம் என்றால் அதில் அதிகளவு காமெடி தான் இருக்கும். முழுக்க முழுக்க ஒரு காமெடி எண்டர்டெமண்ட் படமாக தான் இருக்கும். அப்படி ஒரு படத்தை கொடுக்கும் படக்குழுவிற்கு பெரிய மகிழ்ச்சி என்ன இருக்க போகிறது. அப்படி சினிமா துறையில் பொழுது போக்கு படங்களை கொடுத்த பட்டியலில் இயக்குனர் ராஜேஷ் யாராலும் மறக்க முடியாது. பாஸ் என்ற பாஸ்கரன் உள்ளிட்ட பல எண்டர்டெயினர் படத்தை கொடுத்தவர். அதுபோல நடிகர் சிவகார்த்திகேயனும் நல்ல பொழுது போக்கு படங்களை கொடுத்தவர்.வரும் இளம் நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து உள்ளார். முதன் முதலில் தனுஷ் மூலம் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார். தயாரிப்பாளர் ஞானவேல் அந்த வரிசையில் நல்ல தரமான படங்களை வழங்கியவர். இவர்கள் மூன்றுபேரும் அதாவது இயக்குனர் ராஜேஷ், ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, சிவகார்த்திகேயன் இணைந்து ரசிகா்களுக்கு பெரிய விருந்து படைக்க போவது நிச்சயம்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோக்ரீன் புரொடக்ஷன் சார்பில் சிவகார்த்திகேயன் உடன் சதீஸ் நடிக்கும் இந்த படத்திற்கு ஸ்டுடியோக்ரீன் புரொடக்ஷன் நம்பர் 9 என்று தற்போதைக்கு சிவகார்த்திகேயன் 13 அதாவது sk13 என பெயரிடப்பட்டுள்ள இதன் பூஜையுடன் துவங்கியது.

ராஜேஷ் படத்தில் குடும்பத்தோடு பார்க்கும் படியாகவும், கதாநாயகர்களின் பாத்திர படைப்பு என்று ரசிக்கும்படியாக இருக்கும். அதுபோல சிவகார்த்திகேயன் படம் என்ற வகையில் ரசிகர்கள் எதிர்பார்ப்பு என்ன என்பது இயக்குநர் ராஜேஷூக்கு நன்றாகவே தெரியும். எண்டர்டெயினர் மட்டுமல்லாது சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பயன் பெறும் வகையில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். மற்ற நடிகா் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதன் மையக்கரு நகரத்தை பற்றி கூறும் படம். கண்டிப்பாக ராஜேஷ் இதில் நகைச்சுவை சற்று அதிகமாக தான் வைத்திருப்பார். சிவகார்த்திகேயன் சேருவதால் அதிகபடியான காமெடி நெடி வீசும் என்று நம்பலாம்.