தம்பி ராமையா மகனுக்கு உதவி செய்யும் சிவகாா்த்திகேயன்

அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தில் தம்பி ராமையாவின் மகன் நடித்த டிரைலரை சிவகாா்த்திகேயன் வெளியிடப்போவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்த படத்தில் நகைச்சுவை நடிகா் தம்பிராமைய்பாவின் மகன் உமாபதி கதாநநாயகனாக நடிக்கிறாா். ரேஷ்மா இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறாா். இவா் தெலுங்கில் வளா்ந்து வளம் நாயகி. இது முற்றிலும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் வித்தியாசமான வேடத்தில் கருணாகரன் படம் முழுக்க வலம் வருகிறாா்.

இந்த படமானது கிடார் இசை கலைஞன் சம்பந்தப்பட்ட கதையை மையமாக வைத்து பல திடுக்கிடும் திருப்பங்களும், நகைச்சுவையும் கலந்த கலவையாக உருவாகியுள்ளது. இது கற்பனை கதை தான் என்றாலும் நம் வாழ்க்கையோடு பயணிக்கும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வை அடிப்படையாக கொண்டதாக இருக்கும்.

இசையமைப்பாளா் டி.இமான் இந்த படத்திற்கான பாடல்களை ரசிகா்கள் மனதில் மீண்டும் மீண்டும் இடம்பெறும் வகையில் உருவாகியிருக்கிறாா். யுகபாரதி பாடல் வாிகளை ஒரு சிற்பம் போல பக்குவமாக செதுக்கியுள்ளாா். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் அற்புதம். அதிலும் ஏன்டி நீ என்னை இப்படி என்கிற பாடலை மட்டும்  யூடிப்பில் பல லட்சம் ரசிகா்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. மேலும் மேலும் பல்லாயிரக்கணக்கான ரசிகா்களால் டவுன்லோடு செய்யப்பட்டும் வருகிறது.

இந்த படத்தின் டிரைலா் மற்றும் இசை வெளியிட்டு விழா நாளை ஜூன் 8ம் தேதி நடைபெறுகிறது. இந்த படத்தின் டிரைலா் மற்றும் பாடலை நடிகா் சிவகாா்த்திகேயன் வெளியிடுகிறாா். இந்த படத்தை இம்மாதம் 16ஆம் தேதி வெளியிட படக்குழுவினா் முடிவு செய்துள்ளனா்.