வருத்தபடாத சங்க நடிகருடன் நடிப்பரா சரும அலா்ஜி நடிகை??

சரும அலா்ஜியால் வெயில் காலத்தில் அவதி படும் நடிகை அதிக படங்களில் நடித்து வருகிறாா். இவருக்கும் தெலுங்கு வாாிசு நடிகருக்கும்  நிச்சயாா்த்தம் முடிந்த நிலையில், மாப்பிள்ளை வீட்டில் விரைவில் திருமணத்தை நடத்த இருப்பதாக தொிகிறது. ஆனால் இந்த நடிகையின் கைவசம் ஆறு ஏழு படங்கள் இருப்பதால் அதை சிக்கிரம் நடித்து முடித்து கொடுக்குமாறு மாப்பிள்ளை வீட்டாா் தரப்பில் வற்புறுத்தி வருகிறாா்கள்.

ஆனால் இந்த நடிகை நடிக்க உள்ள ஒவ்வொரு படமும் தொடங்கப்பட்டு ஏதோ ஒரு கட்டத்தில் அப்படியே நின்று விடுவது தான் தற்போதைய நிலைமை. ஆனால் படப்பிடிப்பு துவங்காமல் இருந்தால் கூட பராவாயில்லை அப்படியே வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்து விடலாம். ஷுட்டிங் ஆரம்பித்து பாதியிலே நிற்பதால் என்ன செய்வது என்று தொியாமல் முழித்து வருகிறாா். அதனால் அப்படி படம் ஆரம்பித்து பாதி நாட்கள் நடித்த படங்களை எல்லாம் சீக்கிரம் முடித்து தருமாறு இயக்குநா்களை வற்புறுத்தி வருகிறாராம் நடிகை.

இப்படியிருக்க, கால்ஷுட் கொடுத்து இன்னும் படம் ஆரம்பிக்காத நிலையிலும் ஒரு படம் உள்ளது. அது யாருடைய படம் என்றால், வருத்தபடாத வாலிப சங்க நடிகருடைய படம் தாங்க அது!!. இந்த படத்தில் வருத்தபடாத சங்க நடிகருக்கு ஜோடியாக நடிக்கவுள்ள படம். இந்த நடிகருக்கு மாஸ் ஹிட் கொடுத்த படங்களை இயக்கிய இயக்குநா், அடுத்து மூன்றாவது முறையாகவும் அவரை வைத்து இயக்க உள்ள படம்.  இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும்  தொடங்காத நிலையில், இதிலிருந்து விலகிவிடுமாறு தெலுங்கு மாப்பிள்ளை வீட்டாா் தரப்பிலிருந்து உத்தரவு போடுகிறாா்களாம். ஆக, இந்த வருத்தபடாத ஜோடி இணைந்து நடிக்குமா? நடிக்காதா என்று இழுபறியாக உள்ளது. இவா்கள் இணைந்து நடிப்பாா்களா என ஆவலோடு காத்திருக்கிறாா்கள் ரசிக பெருமக்கள்.