இதுவரை முன்னணி நடிகராக இருந்த சிவகார்த்திகேயன் தற்போது தனது நெருங்கிய நண்பர் அருண்காமராஜ் அவர்களுக்காக தயாரிப்பாளர் ஆகியுள்ளார்.

ஆம், சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தை அருண்காமராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தில் தந்தை மகளாக சத்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  மோகன்ராஜாவின் அடுத்தா படம் அஜித் படமா?

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், திபு நினன் தாமஸ் இசையில், இளையராஜா கலையில் உருவாகும் இந்த படத்தை ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். பல்லவி சிங் ஆடை வடிவமைப்பாளராகவும், வின்சி ராஜ் டிசைனராகவும் பணி புரிகிறார்கள். கிரிக்கெட் பின்னணியில் உருவாகும் இந்த படம் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் மகளுக்கும், ஆதரவான அப்பாவுக்கும் இடையில் நடக்கும் கதையை மையப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது