கனா படம் தயாரித்த விவகாரத்தில் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் சில தவறுகளை செய்து விட்டார் என தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷ், சத்தியராஜ், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்த கனா படம் நல்ல சினிமாவை தேடிப்பிடித்து பார்க்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், மாரி2, கே.ஜி.எஃப், சிலுக்குவார் பட்டி சிங்கம், அடங்க மறு, சீதக்காதி ஆகிய படங்களுடன் கனா படம் வெளியானதால் இப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்க வில்லை.

அப்படி கிடைத்த தியேட்டர்களில் அதிக கூட்டம் இல்லை. சீதக்காதி ரிலீஸான தியேட்டர்கள் வசூல் இல்லாததால் அந்த படத்தை எடுத்துவிட்டு வேறு படத்தை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் நினைத்தனர். எனவே, அந்த தியேட்டர்களில் கனா-வை ரிலீஸ் செய்யலாம் என சிவகார்த்திகேயன் முயற்சி செய்தார். ஆனால், அதுவும் முடியவில்லை. இதனால் சிவகார்த்திகேயன் அப்செட் ஆகியுள்ளாராம்.

இந்நிலையில், இந்த நிலைக்கு சிவகார்த்திகேயனே காரணம் என தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

முதலாவதாக படத்தில் பட்ஜெட் ரூ.18 எனக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு எதற்கு அவ்வளவு செலவு செய்யப்பட்டது என யாருக்கும் தெரியவில்லை. படத்தின் பட்ஜெட்டை குறைந்திருக்கலாம்.

அடுத்து, படத்தின் முக்கிய கதாபாத்திரமான ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை வேடத்தில் சத்தியராஜுக்கு பதிலாக ராஜ்கிரனை நடிக்க வைத்திருக்கலாம் என பலரும் கூறுகின்றனர். சத்தியராஜ் அவரது வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார் என்றாலும், ராஜ்கிரன் நடித்திருந்தால் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும் என சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த வேடத்திற்கு முதலில் ராஜ்கிரணை நடிக்க கேட்டுள்ளனர். ஆனால், அவர் ரூ.2 கோடி கேட்டதால், சத்தியராஜை ஒப்பந்தம் செய்தனர் என்பது கூடுதல் தகவல்.

மூன்றவதாக, இப்படம் வெளியிட்ட நேரம் தவறானது. மாரி2, அடங்க மறு, சீதக்காதி, கே.ஜி.எஃப் என முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியான நேரத்தில் வெளியிடாமல், கொஞ்சம் பொறுத்திருந்து வெளியிட்டிருக்க வேண்டும்.

இந்த தவறுகளை சரி செய்திருந்தால் கனா நிச்சயம் ஒரு வெற்றிப்படமாக அமைந்திருக்கும் என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விமர்சகர்கள் பார்வையில் இப்படி கூறப்பட்டாலும், சிவகார்த்திகேயன் என்ன கணக்கு போட்டாரோ அது அவருக்கு மட்டுமே தெரியும். எப்படி இருந்தாலும் இன்னும் சில நாட்கள் வசூல் இருக்கிறது. இந்த வார இறுதிக்கு பின் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியான அனைத்து படங்களின் வசூல் நிலைமையும் தெரிந்துவிடும்.