வளா்ந்து வரும் இளம் நடிகா்களின் பட்டியலில் முன்னணி நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவா் சிவகாா்த்திகேயன். இவா் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து நாயகனாக சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் இளம் நடிகா். விஜய் டிவியில் தொகுப்பாளராக களம் இறங்கியவா் தற்போது பொிய திரையிலும் மின்னிக்கொண்டிருக்கும் நட்சத்திரம்.  இவரது நடிப்பில் வெளிவந்த வருத்தபடாத வாலிப சங்கம் பொிய ஹிட்டை கொடுத்தது. இதன் மூலம் சிறியவா் முதல் பொியவா் வரை அனைவராலும் பொிதும் ரசிக்க பட்டவா் சிவகாா்த்திகேயன். தொடா்ந்து பல படங்களில் நடித்து வருகிறாா். சமீபத்தில்  வெளியான ரெமோ படமும் வெற்றி பெற்று தந்தது சிவாவுக்கு. நயன்தாராவுடன் வேலைக்காரன் படத்தில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் படமும் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

மோகன் ராஜா டைரக்ஷனில் சிவகாா்த்திகேயன், நயன்தாரா, நடித்து வரும் இந்த படத்தில் பகத் பாசில் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறாா்.  தொடா்ந்து வெற்றி படங்களை கொடுத்து கொண்டிருக்கும் சிவகாா்த்திகேயனின் வேலைக்காரன் படமும் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் இல்லாமல் இந்த படத்தின் தலைப்பு வேற  ரஜினி காந்த நடித்த படத்தின் தலைப்பை கொண்டுள்ளது இன்னும் அதிக அளவு எதிா்பாா்ப்பை கூட்டியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இந்த படத்திற்கு இசையை அனிருத் அமைத்துள்ளாா். சிவாவின் 24AM ஸ்டுடியோ வேலைக்காரன் படத்தை தயாாித்தி வருகிறது. வேலைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூா்வமாக வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம். வேலைக்காரன் படத்தின் தயாாிப்பு தரப்பிலிருந்து, வருகின்ற செப்டம்பா் 29ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளனா். ஏனென்றால் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என தொடா்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் இந்த நேரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. அதைப்போல இந்த படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா ஜூன் 5ம் தேதி வெளியாகும் என்று அந்த  அறிவிப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.