சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் வரும் 18ஆம் தேதி வரவுள்ளதை அடுத்து அவருடைய ரசிகர்கள் இந்த ஆண்டு பிறந்த நாளை பெருங் கொண்டாட்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டிலை தனது பிறந்த நாள் ஆரம்பிக்கும் 18ஆம் தேதி அதிகாலை 12மணிக்கு அறிவிக்கவுள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்று இந்த டைட்டிலும் சூப்பர் டைட்டிலாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  அஜித் ரசிகர்களிடம் சிக்கி சின்னாபின்னாமாகிய இயக்குனர் அட்லி

சிவகார்த்திகேயன், சமந்தா, நெபோலியன், சூரி, சிம்ரன் ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தை 24ஏம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.