விக்ரம், தமன்னா நடிப்பில் விஜய்சந்தர் இயக்கிய ஸ்கெட்ச் திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் இன்று தணிக்கை செய்யப்பட்டது

தணிக்கை அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து ‘யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். நேற்று தணிக்கை செய்யப்பட்ட சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படமும் ‘யூஏ’ சான்றிதழ் தான் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படம் தணிக்கை செய்யப்பட்டு முடிந்துவிட்ட நிலையில் வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே சூர்யா, விக்ரம், அரவிந்தசாமி மற்றும் சண்முகபாண்டியனின் படங்கள் வரும் பொங்கள் தினத்தில் மோதுகின்றன