கோடை வெயில் தாங்க முடியாமல் வீட்டினுள் இருந்த ஏ.சி.யில் பாம்பு 3 மாதம் வசித்து வந்த சம்பவம் புதுச்சேரியில் நடந்துள்ளது.

புதுச்சேரி தேங்காய்திட்டு சாய்ஜீவா சரோஜினி நகரை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். இவரது வீட்டின் படுக்கையறையில் உள்ள ஏ.சி.யை இயக்கும் போதெல்லாம் வித்தியாசமான சத்தம் வந்துள்ளது. எனவே, அதை சரிசெய்ய நினைத்த ஏழுமை ஏ.சி.மெக்கானிக்கை அழைத்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  மயக்க ஊசி செலுத்திய வனத்துறை - பிடிபட்டான் சின்னதம்பி யானை

அப்போதுதான் ஏ.சி.க்குள் பாம்பு இருப்பது அவருக்கு தெரியவந்தது. எனவே, இதுபற்றி வனத்துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. எனவே, வனத்துறை அதிகாரிகள் அந்த வீட்டிற்கு வந்து அந்த பாம்பை பிடித்தனர். அப்போது, ஏ.சி.க்குள் 2 முறை பாம்பு உரித்த சட்டை இருந்தது. எனவே, எப்படியும் 3 மாதங்கள் அந்த பாம்பு அந்த ஏ.சிக்குள் இருந்திருக்க வாய்ப்புண்டு என வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  பாம்புத் தோல் லெக்கின்ஸ் பேண்ட் அணிந்த மனைவி- உண்மைப் பாம்பு என அடித்து காலை உடைத்த கணவர்

ஏ.சியில் இருந்து தண்ணீர் வெளியேறும் பைப்பின் மூலம் வீட்டின் வெளியில் இருந்து பாம்பு உள்ளே வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் பாம்பு ஏ.சிக்குள் தஞ்சமடைந்திருக்கலாம் எனவும் வனத்துறை அதிகாரிகள் கூறினர்.