ஆஸ்திரேலியாவில் பாம்பு தோல் போன்ற லெக்கின்ஸ் பேண்ட் அணிந்த மனைவியின் காலை, உண்மையான பாம்பு என நினைத்து கணவர் அடித்து உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்னைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்தார். என்ன செய்யலாம் என்று யோசித்த அவர், பாம்பு தோல் போன்றதொரு லெக்கின்ஸ் அணிந்துள்ளார்.

அது பாம்பு போலவே இருந்ததால் தனது காலை பார்த்து கணவர் பயப்படுவார் என அவர் நினைத்தார். அந்த உடையுடனே இரவு தூங்கிவிட்டார். இரவில் வீட்டுக்கு வந்த கணவர், தன் மனைவியின் காலுக்கு அடியில் இரண்டு பாம்புகள்
ஊறுவதாக நினைத்து அதிர்ச்சி அடைந்தார்.

அதை லாவகமாக கொல்ல வேண்டும் என நினைத்து, மனைவியை எழுப்பாமலேயே கட்டையால் கால்களை கடுமையாக தாக்கியுள்ளார்.

வலியால் மனைவி அலறவே, அவர் பாம்பை கண்டுதான் அலறுவதாக எண்ணி மீண்டும் தாக்கியுள்ளார். இறுதியில் பாம்பு போன்ற லெக்கின்ஸ் என்பது
தெரியவந்ததும், மனைவியை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.