நான் எங்கும் ஓடி ஒளியவில்லை : சினேகன் வெளியிட்ட வைரல் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இரண்டாவது இடம் கவிஞர் சினேகனுக்கு கிடைத்தது. சினேகன்தான் பிக்பாஸ் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், ஆரவ்வின் வெற்றி அனைவருக்கும் அதிருப்தியைத்தான் கொடுத்துள்ளது.

இதேபோல், சினேகனுக்கும் பிக்பாஸில் அடைந்த தோல்வி மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்திருக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். அதனாலேயே, அவர் யாரையும் சந்திக்காமல் வீட்டுக்குள்ளேயே கிடக்கிறார் என்றும் பேசப்பட்டது. அவர்களுக்கு பதில் சொல்லும் வகையில் சினேகன் இன்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களையும், தன்னை பற்றி வெளிவந்த வதந்திகளுக்கும் விளக்கம் அளிக்கும்விதமாக பல விஷயங்களை கூறியுள்ளார். அந்த வீடியோ இதோ….

https://www.youtube.com/watch?v=ALwg4uv0Bkg