பிக்பாஸ் நிகழ்ச்சியானது பல பிரபலங்களை அடையாளம் காட்டியதோடு அல்லாமல், அவா்களுடைய சினிமா வாழ்க்கைக்கு திருப்புமுனையாகவும் அமைந்தது. அந்த வகையில் வையாபுரி கலகலப்பு 2வில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். நாடேடிகள் பரணிக்கும் சினிமா வாயப்பு கிடைத்துள்ளது. கஞ்சா கருப்பும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் கவிஞா் பாடலாசிரியரான சினேகன் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வாயிலாக மிகவும் பிரபலமைடந்தார். இவா் கிட்டதட்ட 2500க்கும் அதிகமான பாடல்களை எழுதியிருக்கிறார். வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து பின் சினிமாவில் பாடல்களை எழுதிய சினேகனை பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அடையாளம் காட்டியது.

சினேகன் யோகி என்ற படத்தை இயக்கிய அமீா் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது பனங்காட்டு நரி என்ற படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக நடிக்கயிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவா் நடிக்கும் முதல் படம்.இதை இ.வி.கணேஷ் பாபு இயக்குகிறார். ஏற்கனவே இவா் யமுனா என்ற பேய்ப்படத்தை இயக்கியவா்.