பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அதில் கலந்து கொண்ட ஓவியா, ஆரவ், சினேகன், ஜுலி உள்பட அனைவரும் பிசியாக இருக்கும் நிலையில் தற்போது சினேகன், ஓவியா இருவரும் ஒரே படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

‘யமுனா’ என்ற படத்தை இயக்கிய கணேஷ் பாபு ‘பனங்காட்டு நரி’ என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார். சினேகன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் ஒரு அழுத்தமான கேரக்டரில் ஓவியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

இந்த படத்தில் சினேகனுக்கு அவர் ஜோடி இல்லை என்பதும் இருப்பினும் இந்த கேரக்டர் இதுவரை ஓவியா நடிக்காத வித்தியாசமான கேரக்டர் என்பதால் இதில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது