snehan

பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவிஞர் சினேகன். முதல் சீசனில் கலந்து கொண்டு கட்டிபிடி வைத்தியர் என்ற பெயரை பெற்றார். ஏனெனில் அனைவரையும் கட்டிபிடிப்பது இவரது வேலை. இதை பார்த்த அனைவரும் ஏன் இப்படி சினேகன் நடந்து கொள்ளுகிறார் என்று கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் அவரது குணமே இது தான் என்று அந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

mahat with yasika

சினேகன் அனைவரிடமும் அப்படி தான் அன்பாக நடந்து கொள்ளுவார் என்று தெரிவித்தனர். இரண்டாவது சீசனில் பிக்பாஸ் வீட்டிற்குள் பள்ளிக்கூட வாத்தியாராக சென்று வந்தார். அண்மையில் நடந்த கனா காணும் காலங்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது பிக்பாஸ் போட்டியாளர்கள் பள்ளிக்கூட மாணவர்களாக பங்கேற்றனர். அதில் சினேகன் கலந்து கொண்டார்.

mahat with yasika

இந்நிலையில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி எப்படி என்பது குறித்து அண்மையில் தனியார் ஆன்லைன் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தங்கள் சுயத்தை காட்டாமல் நடிக்கிறார்கள்.இதனால் சீரியல் போல் உள்ளது. ஒரு குடும்பமாக அவர்கள் உணர்ந்திருந்தால் அனைவரும் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறி இருப்பார்கள்.ஆனால் அவர்களுக்கு பாசம் புரியவில்லை. இப்போது நடிக்கும் கட்டிப்பிடி எல்லாம் பாசத்தால் வருவது அல்ல. ஏதோ பருவக்கோளாறால் வருவது என்றார்.