விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்  நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் முன்னர் தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய்வர் யார் என்று பிக்பாஸ் கேள்வி எழுப்பினார். அதற்கு ஜூலி தாயுமானவர் என்று பதிலளித்தார். இதனை கண்டித்து சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பிக்பாஸ் சினேகனிடம் அதே கேள்வியை கேட்கிறார். அதற்கு சிறிது நேரம் யோசித்த சினேகன், தாயுமானவர் என்று தவறாக பதிலளிக்கிறார்.  ஜூலி தவறாக சொன்னார் சரி…ஒரு கவிஞருக்கு கூட தமிழ்த் தாய் வாழ்த்து பற்றிய  வரலாறு தெரியாதா? என்ன கவிஞர் இவர் என சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.