கர்நாடகாவில் தனது குழந்தையைப் பள்ளியில் சேர்க்க சமூக சேவகரின் உதவியை நாடிய தாயைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் சமூக சேவகர் போர்வையில் இருந்த காமுகன் ஒருவர்.

கர்னாடகாவில் வாழும் தாய் ஒருவர் தனது மகனை நல்ல பள்ளியில் சேர்ப்பதற்காக ராம்நகரில் உள்ள கன்னட சிரிசேனே அமைப்பைச் சேர்ந்த சமூக சேவகர் மற்றும் கல்வியலாளராக உலாவரும் அந்த நபரிடம் உதவி கோரியுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட அந்த நபர் பதில் உபகாரமாக அந்த பெண்ணை தன் வீட்டில் தங்க சொல்லி வீட்டு வேலைகளை செய்ய சொல்லியுள்ளார்.

அந்த பெண்ணும் அதற்கு ஒத்துக்கொள்ள வீட்டில் இருந்த அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும் 5 நாட்கள் அந்த பெண்ணை தன் வீட்டிலேயே வைத்து தொடர்ந்து பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்துக்கொண்டு அந்தப்பெண்ணை மிரட்டியுள்ளார். மேலும் இதைப்பற்றி வெளியில் சொன்னால் வீடியோவை இணையத்தில் பதிவேற்றி விடுவதாகக் கூறியுள்ளார். ஆனாலும் அந்தப் பெண் தைரியமாக போலிஸில் புகார் அளிக்க சம்மந்தப்படட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.