ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கிடைத்த புகழ் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தவர் ஜுலியானா. இவர் 40 நாட்களுக்கும் மேலாக வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். அனைவரும் வீட்டை விட்டு வெளியேறும் சமயத்தில் வீட்டிற்குள் வைக்கப்பட்டிருக்கும் ஒரு போர்டில் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்துவிட்டு போவார்கள்.

அந்த வரிசையில் ஜுலியும் தனது அனுபவத்தை அங்கு பதிவு செய்துவிட்டு சென்றார். அதில், மரணம் வரை உங்களை மறக்க மாட்டேன். நன்றி. என்றும் உங்கள் கடைக்குட்டி – ஜுலி’ என்று அதில் எழுதியிருந்தார். ஆரம்பத்தில் அவர் எழுதியதை யாரும் உற்றுக் கவனிக்கவில்லை. ஆனால், நேற்று கவிஞர் சினேகன் ஜுலி எழுதியிருந்ததை கவனித்து அதை சுட்டிக்காட்டினார். அவளுடைய பெயரையே அவள் சரியாக எழுதாமல் சென்றுவிட்டாள் என்று சக போட்டியாளர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

அதன்பிறகு, கவனித்ததில், அந்த பலகையில் ஜுலி நன்றிக்கு பதிலாக ‘நனறி’ என்று எழுதியுள்ளார். மேலும், ஜுலிக்கு பதிலாக ‘ஜீலி’ என்று எழுதியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் இதை வைத்து தமிழே தெரியாத வீர தமிழச்சி உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி ஜுலியை மேலும் வறுத்தெடுத்து வருகின்றனர்.