Home சற்றுமுன் இன்பத்தையும் துன்பத்தையும் ஒரு சேர வழங்கும் சமூக வலைதளங்கள்

இன்பத்தையும் துன்பத்தையும் ஒரு சேர வழங்கும் சமூக வலைதளங்கள்

சமூக வலைதளங்களின் முன்னோடியாக முதலில் வர ஆரம்பித்தது ஆர்குட் இதில் அந்த நேரத்தில் இணைந்து கருத்து சொன்ன நபர்கள் ஏராளம். ஆர்குட்டில் இருப்பது நாகரீகமாக கருதப்பட்டது ஒரு காலம். பின்பு ப்ளாக்குகள் வந்தது இதில் சாதாரணர் முதல் சினிமா நடிகர் வரை கதை, கட்டுரைகள், இலக்கியங்கள் என சினிமா சார்ந்தும், ஆன்மிகம், அரசியல் சார்ந்தும் எழுதினர் .

பின்பு இதுவும் ஒரு கட்டத்தில் ஓய்ந்து பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸப் போன்றவை அசுர அவதாரம் எடுத்தது இதன் பயன்பாடு ஆரம்பத்தில் குறைவாக இருந்தாலும் கடந்த 2010ம் ஆண்டுக்கு பின்னும் ஆண்ட்ராய்டு போன் களின் விலை குறைவு அதன் எளிதான வரவுகளுக்கு பின்னர் அதிகமான முறையில் பலர் இதன் செயலிகளை பயன்படுத்தினர்.

சில வருடம் முன் இது பல நண்பர்களை இணைக்கும் பாலமாக இருந்தது. நாம் அதிசயித்து பார்த்த விஐபிக்கள் கூட நம் எழுத்தை கண்டு நம்மோடு நண்பராக இணைந்தார்கள் ஆச்சரியப்படுத்தினார்கள்.

ஒருவர் கருத்து ஒருவருக்கு இருக்காது இது உலக நியதி இது சமூக வலைதளங்களுக்கும் பொருந்தும், தற்போது சமூக வலைதள நண்பர்கள் பெருகிவிட்டதால், எப்பொழுது பார்த்தாலும் ஜாதி ரீதியான மத ரீதியான சர்ச்சை பதிவுகள், அரசியல் ரீதியிலான சர்ச்சை பதிவுகள் அதிகரித்து வருகின்றன.

எதற்கெடுத்தாலும் யாராவது ஒருவர் கருத்து சொல்லிக்கொண்டே இருப்பதால் இதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படுதல் பலருடன் வாதம் செய்தல் அவரை நண்பர் பட்டியலில் இருந்து நீக்குதல் போன்றவை நடைபெற்று வருகிறது.

நம் கருத்தை எதிராளியும் ஏற்க வேண்டும் என்ற தவறான மனோபாவம் இந்த சமூக வலைதளங்களில் பெருகி வருகின்றன.

நல்ல நோக்கத்தோடு பகிர்வதாக நினைத்து சில தவறான தகவல்களும் சமூக வலைதளங்கள் மூலம் திரிக்கப்பட்டு பரப்பபடுகிறது.

அதே நேரத்தில் பலரது நல்ல எழுத்து திறமைகள் அங்கீகரிக்கப்பட்டு சினிமா, பத்திரிக்கை உள்ளிட்ட இடங்களில் கூட அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்து உயர்ந்து இருக்கிறார்கள் இதையும் செய்தது இந்த சமூக வலைதளம்தான்.

அதுபோல் தற்போது பாடல் பாடுவதற்கு வந்திருக்கும் அதிகமான செயலிகள், நகர்ப்புறங்களில் கடும் மன அழுத்தத்தில் வேலை பார்த்துவிட்டு வருபவர்களை அதன் ஒரிஜினல் இசையோடு கூட பாடவைத்து அவர்களது மன அழுத்தங்களை நீக்கி வருகிறது பல நண்பர்களோடும் கூட இணைந்து பாட முடிகிறது.

டப்ஸ்மாஸ் செய்யும் செயலிகளும் பெருகிவிட்டதால் தான் விரும்பிய நண்பரோடு சேர்ந்து தன் அபிமானத்தவரின் சினிமா டயலாக்குகளை அதே பாடிலாங்வேஜோடு நடித்து காட்ட முடிகிறது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக சமூக வலை தளங்களில் மூலம் இன்பம் துன்பம் இரண்டையும் கலந்து மக்கள் அனுபவித்து வருகின்றனர்.