இரண்டு மூன்று நாட்களாக சமூக வலைதளங்கள் முழுவதும் இந்த சிறுவன் தான் ஹாட் டாபிக். அப்படி இந்த சிறுவன் என்ன செய்தான் என்றால், ஏதோ சேட்டை செய்ததற்கு அவன் அம்மா கண்டிக்க, அழுதுகொண்டே அவன் அம்மாவுக்கு அட்வைஸ் செய்யும் காட்சிதான் பலராலும் ரசித்து பார்க்கப்படுகிறது

சேட்டை பண்ணா அடிப்பாங்களா மாட்டாங்களா என அவன் அம்மா கேட்க, சேட்டை பண்ணா சொல்லணும் திட்டாம அடிக்காம வாயில குணமா சொல்லணும் என க்யூட்டாக இந்த சிறுவன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இதையே அதிமுக, திமுக, பிஜேபி, அஜீத்ரசிகர்கள், விஜய்ரசிகர்கள் என பலரும் தங்களுக்கு ஆதரவாக இந்த வார்த்தையை வைத்துக்கொண்டு எதிராளிகளை கலாய்க்கும் வகையில் மீம்ஸ் வெளியிடுகின்றனர். இரண்டு நாட்களாக எல்லா அரசியல் சினிமா நிகழ்வுகளுக்கும் இந்த சிறுவனின் புகைப்படமும் பேசிய பேச்சும்தான் மீம்ஸாக உள்ளது.

'திட்டாம அடிக்காம குணமா வாயில சொல்லணும்'குழந்தைகள் உலகமே வியப்புக்கும் சிறப்புக்கும் உரியவைதான்.நெகிழ்வூட்டும் வீடியோ.

Bharathi Vasanさんの投稿 2018年9月7日金曜日