அஜீத்குமார் நடிப்பில் நேற்று வெளியான படம் விவேகம். ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியானது இந்தப்படம். நடிகரும் இப்படத்தில் நடித்திருக்கும் அக்‌ஷரா ஹாசனின் அப்பாவுமான கமலஹாசன்.இந்தப்பட குழுவினருக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

இப்படி இருந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை என்றே சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பேஸ்புக்,டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இன்று இந்தப்படம்தான் இன்று டிரெண்ட். அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் ஜனரஞ்சகமான விஷயங்களை ரசிகர்கள் எதிர்பார்ப்பது வழக்கம். ஹாலிவுட் ஸ்டைல் என்று சுத்தமாக ஹாலிவுட் ஸ்டைலிலேயே இப்படம் அமைந்திருப்பதும். இதற்கு முன் அஜீத் நடித்த வேதாளம், வீரம் போன்ற படங்களில் இருந்ததை போன்ற மாஸான காட்சிகள் இப்படத்தில் குறைவாக இருப்பதும் ஒரு முக்கிய காரணம்.

சமூக வலைதளங்களில் ஒரு காலத்தில் எழுதியே எழுதியே படம் பார்க்க விடாமல் செய்த அஞ்சான் பட விமர்சனம் போன்று விவேகம் பட விவாதங்களும் நடந்து வருகிறது.