இளம்பெண்களை பிரபல நடிகை ஜீவிதா தனது கணவரின் படுக்கைக்கு அனுப்பியதாக சமூக ஆா்வலர் சந்தியா பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நடிகை ஜீவிதா கோபமாக விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கு நடிகா் ராஜசேகரின் மனைவியும் நடிகையுமான ஜீவிதா மீது சமூக ஆா்வலா் சந்தியா பரபரப்பான குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். பிரபல தெலுங்கு தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சமூக ஆா்வலா் சந்தியா நடிகை ஜீவிதா பல இளம்பெண்களை வலுகட்டாயமாக தனது கணவரின் படுக்கைக்கு அனுப்பியதாக அந்த டிவி விவாதத்தில் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டை பற்றி நடிகை ஜீவிதா செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். நடிகை ஜீவிதா அளித்த விளக்கம் என்னவென்றால், தான் பெண்களை அனுப்பியதை நேரில் பார்த்தாரா? என்று சற்று காட்டமாக கேட்டார் ஜீவிதா.

சந்தியா பேசியதில் எந்த உண்மையும் இல்லை. அப்படி அவா் கூறிய அந்த புகாரை நிரூபிக்க வேண்டும். அப்படி இல்லையெனில் சந்தியா மீதும் விவாத நிகழ்ச்சியை நடத்திய தொலைக்காட்சி மீதும் அவதூறு வழக்கு தொடரப் போகிறேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் நடிகை ஜீவிதா.

அதுபோல சந்தியா சினிமா பிரபலங்கள் என்றாலே அவா்கள் சீப்பானவா்கள் என்று எண்ணுகிறார் போல. இளம் பெண்களை கட்டாயப்படுத்தி படுக்கைக்கு அழைத்து செல்ல அவா்கள் ஒன்றும் சின்ன பாப்பாக்கள் இல்லை. ஆசிபா போன்ற குழந்தைகளுக்கு தனக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாத வயது. ஸ்ரீரெட்டியை பல ஆண்டுகளாக ஏமாற்ற அவா் ஒன்றும் தெரியாத குழந்தை இல்லை. பிரபலங்கள் மீது குற்றம் சுமத்தும் எல்லா பெண்களும் நன்கு விபரம் தெரிந்த வயது உடையவா்கள் தான். தெரிந்தே தவறுக்கு ஒத்துழைத்துவிட்டு பின்னர் குற்றம் கூறுவது பிறரை ஏமாற்றும் கதை என்று ஆவேசமாக ஸ்ரீரெட்டியை நடிகை ஜீவிதா வறுத்தெடுத்தார். செய்தியாளர்களிடம் சமூக வலைத்தளங்களில் வெளியான ஸ்ரீரெட்டியின் வீடியோவை தனது செல்போனில் காண்பித்தார் ஜீவிதா. ஸ்ரீரெட்டி அந்த வீடியோவில் தான் 24மணிநேரமும் செக்ஸி மூடிலேயே இருப்பதாக கூறியுள்ளார்.

சந்தியா மற்றும் விவாத நிகழ்ச்சி நடத்திய டிவி சேனல் மீதும் புகார் அளித்துள்ளதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.