கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரியலின் மூலம் உலகம் எங்கும் ரசிகர்களப் பெற்ற நடிகையான சோபி டர்னர் தனது  காதலனைத் திருமணம் செய்துள்ளார்.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரியலின் கடைசி சீசன் வெளியாகி உலகம் எங்கும் உள்ள ரசிகர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்டு வருகிறது. இந்த் சீரியலில் முதல் சீஸனில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது வரை சிறப்பாக நடித்துக்கொன்டிருக்கும் அழகுப் பதுமையான சோபி டர்னர் தனது நீண்ட்நாள் காதலரான ஜோ ஜோனஸை நேற்று திருமணம் புரிந்துள்ளார்.

சோபியின் காதலரான ஜோ ஜோனஸ் பிரியங்கா சோப்ராவின் கணவரான நிக் ஜோனஸின் சகோதரர் ஆவார். இதன் மூலம் பிரியங்கா சோப்ராவுக்கு தங்கை ஆகியுள்ளார் சோபி. அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள ஒரு தேவாலயத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமேக் கலந்து கொண்ட இந்த திருமணம் மிக எளிய முறையில் நடந்தேறியது.

சோபியின் திருமணப் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானதில் இருந்து உலகெங்கும் உள்ள கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெறியர்கள் சோபி- ஜோ தம்பதியினருக்கு தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.