Murder on Illegal Affair : பலருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த தாயை அவரது மகனை அடித்துக் கொலை செய்த விவகாரம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் அமலோற்பவநாதன். இவரின் தாய் ஜெயமேரி. ஜெயமேரியின் கணவன் சில வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இதைத் தொடர்ந்து ஜெயமெரிக்கு பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது தெரிந்து அமலோற்பவநாதன் கடும் வேதனை அடைந்தார்.

கடந்த சில நாட்களாக அவரும், அவரின் தாய் ஜெயமேரியும் காணவில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில், தனது தாயை தான் கொலை செய்து விட்டதாக அமலோற்பவநாதன் லாஸ் பேட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

அவரிடம் போலீசார் நடத்தி விசாரணையில், அவர் ஜெயமேரியை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. பலருன் தனது தாய் பழகியதால் தான் வேதனை அடைந்ததாகவும், ஒரு கட்டத்தில் தான் வீட்டில் இருக்கும் போதே தனது தாயை தேடி பல ஆண்கள் வந்ததாலும் ஆத்திரமடைந்து தாய் ஜெயமேரியை கொலை செய்து விட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன்பே ஜெயமேரியை அவர் கொலை செய்து விட்டார். அதன் பின், தாயுடன் பிணத்துடன் வாழ்ந்து வந்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அதேநேரம், அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல பேசுவதாகவும் போலீசார் கருதுகின்றனர். எனவே, இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.