பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே தமிழில் குணாலுடன் காதலர் தினம் படத்தில் நடித்து புகழ் பெற்றவர்.

இதில் வந்த ரஹ்மானின் ஹிட் பாடல்களால் தமிழிலும் மிக பிரபலமடைந்தார்.

அர்ஜூன் நடித்த கண்ணோடு காண்பதெல்லாம் படத்திலும் நடித்திருப்பார் அதில் வந்த தாஜ்மஹால் ஒன்று பாடலும் இவர் நடிப்பில் மிக மிக ஹிட் அடித்த பாடல்.

சமீபத்தில் மிக உயர்தர புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தற்போது நியூயார்க்கில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன