சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு திரைப்படம் ‘எஸ்கே12’

பொன்ராம் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், ‘எனக்கும் சூரிக்கும் எப்போதும் கெமிஸ்ட்ரி23 சரியாக ஒர்க் அவுட் ஆகும். அந்த இந்த படத்திலும் அழகாக வந்துள்ளது’ என்று கூறினார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வரும் சமந்தா, ‘அப்ப எனக்கும் உங்களுக்கும் கெமிஸ்ட்ரி இல்லையா? என்று வருத்தத்துடன் கேட்டாராம்