தற்போது நகைச்சுவை நடிகரில் உச்சத்தில் இருப்பவா் நம்ம பரோட்டா சூரி தான். இப்பொதெல்லாம் சமூக வலைத்தளங்களில் நடிகா், நடிகைகள் ஆா்வமாக பங்கேற்று வருகிறார். சூரியும் ட்விட்டர் வலைத்தளத்தில் அடிக்கடி ட்விட்டும் தன்னுடைய செல்பி புகைப்படங்களையும் பதிவேற்றி வருகிறார்.

கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிகா் கார்த்தியுடன் நடித்து வருகிறார் நகைச்சுவை நடிகா் சூரி. இந்நிலையில் இவா் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வெள்ளந்தி சிரிப்பும் விளையாடுற தண்டட்டியும் தமிழ் மண்ணுக்கே உரிய அடையாளம். செல்ல அப்பத்தாக்களோடு ஒரு செல்பி என்று பதிவிட்டத்தோடு கடைக்குட்டி சிங்கம் ஷீட்டிங் ஸ்பார்ட் என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகா் கார்த்திகேயன் என்ணன்னே க்ளாஸ்மேட்ஸ் கூட கெட் டூ கெதரா என்று பதிவிட்டத்தோடு நிற்காமல் அந்த வெள்ளந்திச்சிரிப்பு உனக்கு ரேபான் கூலர்ஸ் போட்டதான் தெரியுமா? என்றும் கலாய்த்தும் ட்விட் செய்துள்ளார்.

அதற்கு பதில் ட்வீட் செய்த சூரி, யெஸ் யெஸ் ஆனா அவங்க என் டாடியோட க்ளாஸ்மேட்ஸ் பங்கு என பதிவு செய்திருத்தார். இப்படி சமூக வலைத்தளங்களின் வழியாகவும் தங்கள் நட்பை பேணி பாதுகாத்து வருகிறார்கள் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி.