நகைச்சுவை நடிகர் சந்தானம், கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். இதனால் எல்லோரும் சூரியை தங்கள் படங்களில் காமெடி வேடத்துக்கு நடிக்க அழைத்தனர். இதனால் அவரது காட்டில் மழை கொட்டியது. இதனால் சூரி கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்.

இதற்கு இடையில் யோகி பாபுவின் உடல் மொழி மற்றும் நடிப்பு பாராட்டும் வகையில் இருந்ததால், அவருக்கு சுக்ர திசை ஆரம்பம் ஆனது. இதனால் தற்போது சூரி இல்லாத படங்களில் யோகி தான் காமெடி ஹீரோவாக வலம் வருகிறார். இதனால் யோகி கோடிகளில் சம்பளம் வாங்க ஆரம்பித்துவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் யோகி பாபு அதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

தற்போது யோகிக்கும், சூரிக்கும் தான் கடும் போட்டி நிலவுகிறது.