மாணவி சோபியா விமானத்தில் பாஜக தலைவர் தமிழிசை முன்னிலையில் பாசிச பாஜக அரசு ஒழிக என கோஷமிட்டது, அதன் பின்னர் விமனநிலையத்தில் தமிழிசை அந்த மாணவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சிறைக்கு அனுப்பியது, பின்னர் சோபியாவின் ஜாமீன். அவரது தந்தை அளித்த புகார் என தமிழகம் பரபரப்பாகவே காணப்படுகிறது.

மாணவி சோபியா பாசிச பாஜக என கூச்சலிட்டதாக கூறி அவரை சிறைக்கு அனுப்பினார்கள். ஆனால் அவரை தேவிடியா வெளியே போ உன்னை கொல்லாமல் விட மாட்டோம் என அங்கிருந்த பாஜகவினர்கள் மிரட்டியதாக சோபியாவின் தந்தை புகார் அளித்துள்ளார். இது மட்டும் எந்தவகையில் நியாயம்.

ஒரு இளம்பெண்ணை, அதுவும் மாணவியை இப்படி அச்சில் ஏற்றமுடியாத தகாத வார்த்தைகளால் திட்டுவதும், கொலை மிரட்டல் விடுத்துள்ளதும் குறித்து பாஜக தலைவர் அதுவும் பெண் தலைவர் தமிழிசை கருத்து தெரிவிக்காதது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.

அந்த மாணவியை இப்படி மோசமான வார்த்தைகளால் பாஜகவினர் திட்டியது அவரது தந்தை அளித்துள்ள புகார் கடிதத்தின் மூலமாகவே தெரியவந்துள்ளது. இந்த கடிதம் இன்னமும் தமிழிசையின் கவனத்துக்கு செல்லவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. ஒரு பெண் தலைவரின் முன்னிலையிலேயே ஒரு மாணவியை இப்படி பேசிய சம்பவம் நடந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளது. இதுகுறித்து தமிழிசை விரைவில் கருத்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.