சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 2011ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி சிங்கப்பூர் மருத்துவமானையில் ஆபத்தான நிலையில் அட்மிட் ஆனதை அவரது மகளும் இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த், டுவிட்டரில் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இந்த நாளையும் 7 வருடங்களுக்கு முன்பு இதே நாளையும் என்னால் மறக்க முடியாது என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார். 7 வருடங்களுக்கு முன்பு 28-5-2011 அன்றைய தினத்தில் அப்பா உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார்.

கடவுளின் அருளால் நல்ல ஆரோக்கியத்துடன் சில தினங்களில் உயிர் திரும்பினார். மக்களின் பிரார்த்தனைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. 7 வருடங்களுக்கு பின்பு இன்று உங்கள் அன்புடன் காலா கொண்டாட்டம்’ என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இவ்வாறு செளந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்