தனுஷ் சார்..உங்களிடம் நிறைய கற்றுக் கொண்டேன் – சௌந்தர்யா உருக்கம்

ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்கி, நடிகர் தனுஷ் நடித்து வரும் வேலை இல்லா பட்டதாரி 2ம் பாகத்தின் படப்பிடிப்பு ஏறக்குறையை முடிவடையும் நிலையில் உள்ளது.

தனுஷ் நடித்து வெளியான வேலையில்லா பட்டதாரி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அப்படத்தின் 2ம் பாகத்தை, ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா இயக்கி வருகிறார். இதில், தனுஷ், அமலாபால், பாலிவுட் நடிகை காஜல் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், தனுஷ் நடிக்கும் காட்சிகள் சமீபத்தில் முடிவடைந்தது. அதன் கடைசி நாளன்று, நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் “ தலைவரின் ஆசிர்வாதத்துடன் விஐபி2 படத்தின் படப்பிடிப்பை இன்றோடு முடித்துக் கொண்டேன். சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் தாணு சார் ஆகியோருக்கு நன்றி” என கூறியுள்ளார்.

இதைக் கண்ட சௌந்தர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் “ நன்றி தனுஷ் சார்.. உங்களிடம் நிறையக் கற்றுக் கொண்டேன். இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.