நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா – விஷாகன் திருமணம் சென்னையில் இன்று கோலகலமாக நடைபெற்றது.

சௌந்தர்யாவிற்கும், நடிகர் விஷாகனுக்கும் நடைபெற்ற திருமணத்திற்கு பலரும் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

தன்னுடைய மகள் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என ரஜினி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் கமல்ஹாசன் வரை பலருக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.

இன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரை சென்னயில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் சவுந்தர்யா – விஷாகன் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் ரஜினியின் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ், கமல்ஹாசன், ஸ்டாலின், வைகோ, அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திருநாவுக்கரசு, மு.க.அழகிரி ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தினர்.

அதேபோல், தனுஷ், அனிருத், ஒய்.ஜி.மகேந்திரன், தயாரிப்பாளர் தானு, குஷ்பு உள்ளிட்ட பல திரைப்பட பிரபலங்கள் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.