ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சவுந்தர்யா – விஷாகன் திருமணம் நேற்று காலை சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பிஎஸ், கமல்ஹாசன், வைகோ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதேபோல், நேற்று மாலை அதே ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.

இதிலும், ரஜினிக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

உதயநிதி ஸ்டாலின், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர்.

அதேபோல், சௌந்தர்யா மற்றும் விஷாகனின் நண்பர்கள் மற்றும் தனுஷ், பாலிவுட் நடிகை காஜல், திவ்ய தர்ஷினி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதேபோல், முகேஷ் அம்பானி அவரின் மனைவி நீடா அம்பானி நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.