தனுஷ் நடிப்பில் செளந்தர்யா இயக்கத்தில் இன்று வெளியான ‘விஐபி 2’ திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றுள்ளது. பெரும்பாலானோர் இந்த படம் முதல் பாகம் அளவிற்கு இல்லை என்றும் அனிருத் இசை இலலாதது மிகப்பெரிய மைனஸ் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ‘விஐபி 3’ படத்தை விரைவில் தொடங்க இருப்பதாக செளந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார். ‘விஐபி 2’ படத்தின் விவாதத்தின்போதே 3வது பாகத்தின் கதையையும் தனுஷூடன் ஆலோசித்துள்ளதாகவும் மிக விரைவில் ‘விஐபி 3’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவை பொருத்தவரையில் ‘சிங்கம்’ படம் மட்டுமே 3 பாகங்களில் வெளிவந்துள்ளது. இதனையடுத்து வெகுவிரைவில் ‘விஐபி’ படத்தின் 3ஆம் பாகமும் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திலாவது அனிருத் இருப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்