நடிகர் ரஜினியின் மகள் சௌந்தர்யாவும், விஷாகனும் திருமணம் செய்து கொண்ட விவகாரம் சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டிங் ஆகியுள்ளது.

நடிகர் ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் 2வது திருமணம் இன்று ரஜினியின் போயஸ்கார்டன் இல்லத்தில் எளிமையாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கமல்ஹாசன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வைகோ, திருநாவுக்கரசு, ஸ்டாலின் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இன்று காலை முதலே டிவிட்டரில் #SoundaryaWedsVishagan என்கிற ஷேஷ்டேக் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் #Soundryarajinikanth ஹேஷ்டேக் இடம் பெற்றிருந்தது.

நேற்று திருப்பூருக்கு மோடி வந்த போது #GoBackModi ஹேஷ்டேக் முதலிடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.