செளந்தர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்: காரணம் என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும், ‘விஐபி 2’ படத்தின் இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

கணவர் அஸ்வினை விவாகரத்து செய்யும் வழக்கின் விசாரணை இன்று சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததால் அவர் நீதிமன்றத்தில் ஆஜரானதாக கூறப்படுகிறது. மேலும் அவரது கணவர் அஸ்வின் அவர்களும் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அஸ்வின் தம்பதிகளிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவெடுத்து விவாகரத்துக்கு மனு செய்தனர். இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. விசாரணையில் முடிவில் இருவருக்கும் விவாகரத்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.